வாழ்த்து முகில்கள்

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
இனிய இல்லற இணைவின் 52வது ஆண்டு நிறைவு
Dienstag, 5. August 2008


உயர்திரு J. பயஸ் டயஸ் உயர் திருமதி P. புஷ்பராணி தம்பதி

கடலலைபோல் இன்ப துன்பம் வந்து வந்து போகும்
கடவுள் இணைத்த அன்பு வாழ்வு நிலைத்து நின்று வாழும்
இல்லறத்தின் பாதை சேர்ந்து உள்ளமொன்றி வாழும்
நல்லறத்தின் மக்களிவர் அன்பு என்றும் வாழ்க!

அண்ணன், அக்கா என்று எங்கள் பாசம் பெற்ற நீங்கள்
எண்ணமதில் தீதுஎன்ப தேஅறியா மக்கள்
அன்று முதல் இன்றுரை இதயமதில் நீங்கா
தென்றலாக மதிப்புடனே வாழுகின்ற வர்கள்

மூன்று செல்வம் பெற்ற உங்கள் இல்லறத்தின் சாட்சி
ஒன்று இன்று இன்றி இதயம் துயரமுற்ற போதும்
நன்று ஒன்றே தெய்வம் செய்யும் என்பதனை நம்பி
என்றும் நலம் சூழவாழ்க! வென்று வாழ்த்து கின்றோம்

பல்லாயிரம் மைல் கடந்து ஜெர்மனியி லிருந்து
எல்லாருமே இணைந்து இனிய வாழ்த்து இன்று சொன்னோம்
பல்லாயிரம் மலர்களாக எங்க ளனைவர் பாசம்
எல்லாரையும் சூழ இதயம் நிறைந்து வாழ்த்து கின்றோம்.

52வது திருமண அகவை நிறைவைக் கொண்டாடும் பயஸ் அண்ணனுக்கும் ராணி அக்காவுக்கும் நானும் எனது குடும்பமும் எங்கள் இதயம் நிறைந்த அன்பையும் பாசத்தையும் வாழ்த்துக்களையும் அளித்து மகிழ்கிறோம்.

என்றும் அன்புடன்,
போஸ்கோ அமலேந்திரன் (எழிலன்),
விஜயராணி மற்றும் குடும்பத்தினர்.
posted by Unknown @ 05:30   0 comments
ஒலிவியா பெர்னாண்டஸ்
Mittwoch, 23. Januar 2008


பொலிவாய் விளங்கும் புது மென்மலரே!
உன்னை வாழ்த்துவதில் மனம் நிறைந்தேன்

பனியதன் மென்மை உருவினிலும்
பனியதன் தூய்மை இதயத்திலும்
இனித்திடும் விதமாய் அழகினிலும்
திகழ்ந்திடும் எழிலே பொன் மலரே!

புத்தம் பதிதாய் நீ மலர்ந்தாய்!
பெற்றவர் இதயம் குளிர வைத்தாய்!
உற்றவர் இதயம் அனைத்திலுமே
தேனாய் இனித்தாய்! மென் மலரே!

ஓலிவியா எனநீ பேர் கொண்டாய்
ஒளிவிடு விளக்காய் மனம் நிறைத்தாய்!
இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடவே
இறைஉனை அளித்தார். வாழியவே!

கடல் கடந்திருந்தே உனைக் கண்டேன்
மடலுடன் உன்மலர் முகம் கண்டேன்
ஆசியும் வாழ்த்தும் கவிவடிவில்
அளிப்பதில் எந்தன் மனம் நிறைந்தேன்!
posted by Unknown @ 16:02   0 comments
Happy Birth Day!
Freitag, 16. März 2007
Happy Birth Day!
எங்கள் இனிய 2வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


Joanne Elisabeth Fernando
ஜோஆன் எலிசபெத் பெர்னாண்டோ
posted by Unknown @ 17:00   0 comments
நல்ல இரு இளம் உள்ளங்கள் நீடூழி வாழ்கவே!
Mittwoch, 14. März 2007
திரு. ஜெக்கி திருமதி ஷேர்லி பெர்னாண்டஸ் தம்பதி

நல்லெண்ணம், நற்குணம், நல்லுணர் வெல்லாம்
நல்லரைப் பெற்றோராய்ப் பெற்றவர்கட்கு
நல்லிறை வன்தரும் வரமென்று சொல்வார்
நல்லவர் இருவரின் இணைவதும் என்பார்

தமிழகம் தன்னிலே எம்முற வாகவே
தமிழ்மணம் கமழ்மங்கை ஷேர்லியும் இருக்கிறார்
அமிழ்தான புதுவாழ்க்கை அமையவே இறைவனும்
தமிழ்மணம் கமழவே இல்லறம் காட்டினார்

குணமதும் ஒழுக்கமும் நிறைவாக உள்ளவர்
கணணியில் கைதேர்ந்த கலைஞராம் ஜெக்கியும்
குணமகள் ஷேர்லியின் கரம்பற்றி இல்லறம்
மணம் வீசி ஒளிரவே இறைஆசி நிறைகவே!

கடல்கடந் தேநாங்கள் வதிகின்ற போதிலும்
மடல்தந்த செய்தியால் மகிழ்ந்துநாம் வாழ்த்தினோம்
நலங்களும் நல்லாரின் ஆசியும் கூடியே
நலம்பல வும்பெற்று நீடூழி வாழ்கவே!

எல்லாம் வல்ல இறைவனின் வழிகாட்டலும் ஆசீரும்
என்றும் நிறைவாகக் கிட்டிவர எங்கள் இதயந் திறந்து
வாழ்த்தி மகிழ்கிறோம்.

என்றும் அன்புடன்,

எழிலன், விஜயராணி தம்பதி,

பிள்ளைகள்

தினேஷ், திபேஷ், தயானா
(ஜேர்மனி)
posted by Unknown @ 18:19   0 comments
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 வாழ்த்து முகில்கள் Design by சோழியான்